!!! ... நாயும் நானும் ...!!!
(கரூர் - ல் நடந்த கொடூர சம்பவம்)
அன்று முழு நிலவு... இரவு சுமார் 10 மணி... நானும் எனது மச்சானும் மகா குடி போதையில் இருந்த நேரம்... மப்பு தலைக்கு மேல் ஏறி பரத நாட்டியம் ஆடி கொண்டிருந்தது..
கடைசியாக ஒரே ஒரு குவாட்டர் மட்டும் மிச்சம் இருந்தது. அடுத்த 5 நிமிடத்தில்
அதையும் குடித்து விட்டு 12 மணி வாக்கில் வீட்டிற்கு சென்றோம். அப்போது தான் அந்த வெறித்தனம் அரங்கேறியது.
நான் உள்ளே நுழைந்ததும் என் மச்சான் வீட்டில் இருந்த நாய் ஒன்று என்னை மிக வெறித்தனமாக உற்று நோக்கியது. நானும் ஏதோ மனநலம் குன்றிய நாய் போல என்று சற்றே ஒதுங்கி சென்றேன். அப்போது வீணாப்போன என் மச்சான் என்னிடம், "உங்க ஊரு நாய் மாதிரி இத நெனசுடதீங்க, இது கடிச்சு வெச்சுடும்" னு என்னை வெறுபேத, எனக்குள் இருந்த Bagpiper - உம நன்றாக குழல் ஊத, நான் நம்ம ஊர் திமிரை காட்டுறேன் னு சொல்லி அந்த நாய்யை கிட்ட நெருங்கி, கடுங்கோவதில் வெறிக்க வெறிக்க முறைத்து பார்த்து கொண்டிருந்தேன். அது என்ன கோவத்தில் இருந்ததோ, கடுகளவும் யோசிக்காமல் என்னிடம் பாய்ந்து விட்டது. நானும் அவசரத்தில் அருகில் இருந்த பூட்டு ஒன்றை எடுத்து அதன் நடு மண்டையில் நச்சென்று போட்டு விட்டேன்.
அடேங்கபா............
அதற்கு பிறகு அது போட்ட சப்தம்... வீட்டில் இருந்த அனைவரும் விழித்து கொண்டனர். எங்கள் குட்டும் வெளிப்பட்டு விட்டது. நானும் எனது மச்சானும் நன்றாக மாட்டி கொண்டோம்.
Moral: எவ்வளவு மப்பில் இருந்தாலும் நாய் அருகில் செல்லவேண்டாம்...
நன்றி..
அந்த நாய் கிட்ட கடிவாங்க வந்தது வரைக்கும் தப்பிச்சடா தம்பி ..
ReplyDeleteஅது சரி - கதையின் இறுதியில் மாரல் சூப்பர்
ReplyDelete