இறைவனடி சேர்ந்தார்.
உலகப்போர் 2-ம் உலகப்போரின்போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து ஹிரோசிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின. இதில் ஹிரோசிமா நகரில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள்.
இந்த அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் யாமகுச்சி. இவர் நாகசாகியில் உள்ள பிட்சுபிசி கம்பெனியில் என்ஜினீயராக பணி புரிந்தார்.
முதல் குண்டு 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி ஹிரோசிமா நகரின் மீது வீசப்பட்டது. யாமகுச்சி இருந்த தெருவில் இருந்து 2 கி.மீ. தொலைவில் குண்டு விழுந்து வெடித்தது. இதில் யாமகுச்சியின் தோள் பட்டையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
2 நாட்கள் கழித்து யாமகுச்சி அருகில் உள்ள நாகசாகி நகருக்கு சென்று பெற்றோருடன் சேர்ந்தார். அவர் போன 2 நாளில் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இதிலும் அவர் உயிர் தப்பினார். என்றாலும் அந்தப்பகுதி முழுவதிலும் அணு கதிர்வீச்சு ஏற்பட்டது.
யாமகுச்சிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டது. இதில் அவர் நேற்று இறந்தார். புற்று நோயுடன் போராடி வந்தார். 93 வயது வரை வாழ்ந்தார். டபுள் ரேடியேசன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட செய்திப்படத்தில் யாமகுச்சி நடித்தார். அதில் அவர் அணுகுண்டு வீச்சு குறித்து சிறப்புரையாற்றினார். அணு குண்டுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இரண்டு குண்டுவீச்சிலும் தப்பிய ஒரே நபர் யாமகுச்சி யாவார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள், 5 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
I'm on the way to see ur comments.. Since u didn't write it... Then do it now..
தகவல்கள் - நன்றி
ReplyDelete