என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Saturday




    
என்ன கொடுமை சார் இது!!!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------

குடுத்து வெச்ச மவராசன் திரு. ஜேக்கப் ஷூமா





தென்ஆப்பிரிக்காவின் அதிபராக இருப்பவர் ஜேக்கப் ஷூமா (வயது 67). இவருக்கு திருமணமாகி விட்டது. ஏற்கனவே இவர் 4 பெண்களை மணந்துள்ளார். இந்த நிலையில் தற்போது 5-வதாக ஒரு பெண்ணை நேற்று திருமணம் செய்தார். அவரது பெயர் தோபிகா மடிபா ( வயது 37).

இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்க நாட்டின் பாரம்பரிய முறைப்படி காண்ட்லா நகரில் நடந்தது. இவர்களின் திருமணத்தில் காண்ட்லா நகர மக்களும், அதை சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இவர்கள் பாரம்பரியமான விலங்குகளின் தோலினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். தென் ஆப்பிரிக்காவில் தற்போது குளிர் காலமாகும். கொட்டும் பனியில் இந்த ஜோடியின் திருமணம் நடந்தது.

அதிபர் ஷூமாவுக்கு கடந்த 1973-ம் ஆண்டு சிஷா கிள் குமாலோ என்ற பெண்ணுடன் முதல் திருமணம் நடந்தது. இவரை தொடர்ந்து நொம்பு மெலோலா என்பவரை இவர் 2-வது திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் அதிபரின் 5-வது திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஷூமா 3-வது மனைவி தற்கொலை செய்து கொண்டார். 4-வது மனைவி லாமினியை ஷூமா விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இவர் தென்ஆப்பிரிக்காவில் உள்துறை மந்திரியாக இருக்கிறார்.

5-வதாக திருமணம் செய்து இருக்கும் தோபியா மடிபாவுடன் அதிபர் ஷூமா ஏற்கனவே குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மே மாதம் ஷூமா அதிபராக பதவி ஏற்றபோது தனது குழந்தைகளுடன் மடிபா விழாவில் கலந்து கொண்டார்.

அப்போதே அவருக்கு ஷூமாவின் மனைவிக்குரிய அஸ்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இவரை திருமணம் செய்து தனது அதிகாரப்பூர்வ மனைவியாக ஷூமா அறிவித்துள்ளார்.

5 மனைவிகளின் மூலம் அதிபர் ஷூமாவுக்கு 18 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 6-வது திருமணத்துக்கு அவர் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பது இதுதானோ.

ரசித்த இடம்: மாலை மலர்.


           Post your Comments here..




1 comment:

  1. இளமை துள்ளி விளையாடுகிறது

    நல்வாழ்த்துகள் கொங்கு புயல்

    ReplyDelete