என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Monday

இப்போ நானும் இஞ்சினியர்

கிர்ர்ரர்ர்ர்ர்...

மூணு வருஷம் முக்கி முக்கி படிச்சு, மூவாயிரத்தி முப்பத்தி ஆறு பரீட்சைக்கு பிட் எழுதி, மொக்க மூஞ்சிகள சைட் அடிச்சு, துபாய் போன துக்ளக் மாதிரி சீன் போட்டு, வாத்தியார் கிட்ட வாய் பேசி, தெரு ஓரத்துல தம் அடிச்சு, தருதலையா திரிஞ்சு.. அலைஞ்சு.., அலசி.. புளிஞ்சு..,  காஞ்சு கருவாடாகி........

 பச்சை குழந்தையிடம் பால் திருடி, பலபேருக்கு பங்கிட்டு பரிமாறி, காலாவதி ஆன கணக்கு பாடத்த கண் முழிச்சு கணினி-ல படிச்சு.....

ஒடஞ்ச பொருளுக்கு கப்பம் கட்டி, ஓடாத கம்ப்யூட்டர் ல ஓராயிரம் ப்ரோக்ராம் எழுதி, ஒன்பது மணி நேரம் ஒரே எடத்துல உக்காந்து, ஒழுங்கா மரியாதையா, அழகா அறிவா, படிச்சு முடிச்சுட்டேன்...!!

இப்போ நானும் இஞ்சினியர்  ;)


3 comments: