இன்று வானம் சற்றே மேக மூட்டத்துடன் காண பட்டதால், பொறுமையாக படுத்து உறங்கிவிட்டேன். மதியம் சுமார் 1 மணி அளவில் என் கண்ணுக்குள் யாரோ வெல்டிங் வைப்பது போல் ஒரு உறுத்தல். என்ன என்று அறிந்து ஆராய்ந்து பார்த்ததில், காலை கதிரவன், மட்ட மதியத்தில் ஓவர் ஒளியை பரப்பி சூடு பிடிக்க வைத்து, எனது கண்ணுக்குள் கபடி விளையாடி இருப்பது தெரிய வந்தது... உடனே என் தாய் பாட்டி வைத்தியத்தை மேர்ந்கொண்டு வந்த சூட்டிற்கு செருப்படி கொடுத்து வெளியே விரட்டி விட்டார்... அது என்ன அந்த அசுர வைத்தியம்???
அங்கு தான் வெள்ளரிக்காயின் வேலைதனம்.கூடாரம் கட்டி ஒளிந்து இருக்கிறது. அந்த குளுமை நம் கண்களில் பட்ட 5 நிமிடத்துக்குள் எனக்குள் வந்த ஒரு சிலுசிலுப்பு, full அடித்தாலும் கிடைக்காத இன்பம்..வலியும் விரைவில் குணம் அடைந்து விட்டது.
குறிப்பு: வெள்ளிரிக்காய் சரக்கடிக்க மட்டும பயன்படாது.. இந்த மாதிரி சூடுகளை சுளுக்கு எடுக்கவும் பயன்படும் என்பதை இக்கணம் நான் தெரிவிக்க விரும்புகிறேன்....
நன்றி...
சரக்கடிக்க வெள்ளரிக்காயா .....
ReplyDeleteபாட்டி வைத்தியம் எப்பொழுதும் வேலை செய்யும்
நல்வாழ்த்துகள் கொ.பு