மாலை 6 மணி அளவில் அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு மிகவும் சோர்வுடன் வீடு சென்று அடைந்த நான், ஆற அமர எனது குப்பை படுகையில் உட்கார்ந்து, "அம்மா காப்பி குடு" என்றேன். இரு டா வரேன் என்று பதில் வந்தது. சரி சுட சுட காப்பி குடித்துவிட்டு சற்று ஓய்வு எடுக்கலாம்னு நினைக்கும்போது, சுட சுட சுட்ட வடைகள் வந்திறங்கியது அம்மாவின் கையிலிருந்த தட்டிலிருந்து.
இத எதுக்கு மா கொண்டுவந்தே. நான் உங்கிட்ட என்ன கேட்டேன் நீ என்ன பண்ணிருக்கே.... என்று கொஞ்சம் கனமாக அதட்டி விட்டேன். அதற்கு என் தாய் கொடுத்த விளக்கங்கள் பின் வருபவைகள்....
அட அறிவுகெட்ட முட்டா பய மவனே.. இது சாதாரண வடை இல்ல டா. மனதுக்கு தெம்பும், உடலுக்கு வலிமையையும் தர கூடிய பருப்பு வடை. இத தினமும் ஒன்னு சாப்டா, ஒடம்புக்கு எந்த நோயும் வராது, வேலை களைப்பு இருக்காது, ஒடம்பு எப்பும் சுறுசுறுப்பா இருக்கும். வெயில் காலத்துல இந்த வடை மிகவும் நல்லது. சூட்டை தனித்து சுறுசுறுப்பை தரும். முகத்துல பரு இருந்தா மறைஞ்சுடும். இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு டா ராஜா-னு சொல்லி முடித்த கணம் நான் திறந்த வாய் மூடாமல் இருப்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது. வாயில் வழிந்த ஜொள்ளை துடைத்துக்கொண்டு வயிறார வடைகளை வதம் செய்தேன்.
Moral: பருப்பு வடையின் மேல் வெறுப்பு வேண்டாம்.
machan adu masal vadai a illa medu vadai ah............
ReplyDeletevadai ya pathi pesi vedapakuraneyaaaaaaaa
ReplyDeletenalla iruku.
ReplyDeleteMr. Oomaipuli, you had a great future. Keep it up.
ReplyDeleteNandrigal Pala Kodi... :P
Deletecool star
ReplyDeletedankx ;)
Deletevadaya pathe pesuneenga. aana adhuku adila irundha thatta miss paniteengaley
ReplyDeletehaha... andha thattuku oru kadhai iruku nanba... adutha post la soldren... :D
Deleteஅட வடை போச்சே... சூப்பர்.வாழ்த்துக்கள்
ReplyDeletenandri nanbarey... :)
Deletenalla edukai....fun and karuththu...vaalthukal
ReplyDeletenandri kavi... :)
Delete