நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் எனது நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன். போகும் வழியில் மிக களைப்பாக இருந்த காரணத்தால் ஒரு கடையின் முன்பாக எனது வண்டியை நிறுத்தி ஒரு குளிர் பானம் ஒன்று வாங்கி குடித்தேன். பிறகு கொஞ்சம் மப்பு தட்டியது போல் இருந்ததால் ஒரு சிகரட் ஒன்று வாங்கி வந்த மப்பை மண்டையில் இருந்து வெளியே விரட்டி கொண்டிருந்தேன். இந்த கவனத்தில், நான் நின்று கொண்டிருந்த இடம் ஒரு பொது இடம் என்பதை அப்போது நான் உணரவில்லை. அந்த வழியாக வந்த ஒரு காவல் துறை உயர் அதிகாரி என்னை கையும் களவுமாக பிடித்துவிட்டார். நான் செய்வதறியாது நின்ற பொது அவர் மிக சாந்தமாக என் அருகில் வந்து கூறிய வசனம் என்னை திகைக்க செய்து விட்டது. அவர் கூறியது என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது..
" நீ தம் அடிக்குறது பாக்க அழகா தான் இருக்கு... (சிரிப்பு வந்தது) ஆனா இந்த அழக நீ காட்ட வேண்டிய இடம் இதில்ல தம்பி... இப்போ எல்லா பொண்ணுகளும் உன்ன பாக்கும், ஆனா, நாளைக்கு உங்க அப்பா அம்மா பாக்க கூட நீ இருக்க மாட்டே... இனியும் நீ இந்த கருமத்த அடிகனுமானு நீயே முடிவு பண்ணிக்கோ.."
அடுத்த நொடி பொழுதில் ஏழு வருடமாக இருந்த எனது ஆறாவது விரலை மறந்து... பிரிந்து விட்டேன்..
குறிப்பு: புகை பிடிக்கும் எல்லோருக்கும் இப்படி ஒரு புத்தர் கிடைப்பது அரிது. யாராவது சொன்னதுக்கு அப்பறம் திருந்துவதை விட இதை பார்த்த பிறகாவது திருந்துவது உத்தமம். நன்றி.
Can't hear your comment.. So write it here..
சங்கமத்தில் ஐக்கியம் ஆனா தம்பியே .. வாழ்த்துகிறேன் .
ReplyDeleteஆகா - இப்படியும் ஒரு காவல் துறை அதிகாரியா - வாழ்க
ReplyDeleteநல்வாழ்த்துகள் கொங்கு புயல்
நன்றி சீனா...
ReplyDeleteNeenga Entha oor Thambi unmailey kovai thaana.....????
ReplyDelete