என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Friday

ஒரு புருஷனின் புலம்பல்

மனைவிகளே... காதல் துணைவிகளே... 

தாலி கட்டிய நாள் முதல், எங்கள் சந்தோஷத்துக்கு வேலி கட்டிய மாமியார் பெத்த மகள்களே...

கடவுளின் துகள்களே.. தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாய் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே....

கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்க பேசுனீங்க...
ஆனா கல்யாணம் ஆனதுல இருந்து தட்டு, டம்ளர் எல்லாம் தூக்கி வீசுறீங்க...
"சத்தியமா நெனச்சு பாக்கல, இப்படி ஒரு மாறுதல..
அதனால தான் அரசாங்க பார்-க்கு தேடி போறோம் ஆறுதல..."

கொஞ்சி பேசிய குரல் எங்கே?
கிள்ளி விளையாடிய விரல் எங்கே?
எங்க காதல பாடுன "ஸ்நேகிதனே.. ஸ்நேகிதனே.." பாட்டு எங்கே?
என்னோட ரிசெப்ஷன்-க்கு வாங்குன RAYMONDS கோட்டு எங்கே?
ஆமா, நேத்து சட்டைல வெச்ருந்த நூறு ரூபா நோட்டு எங்கே?
எங்கே?.. எங்கே?.. எங்கே?..

உங்கள கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம்,..
என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் கட் பண்ண சொல்லி ஊட்ட ஆரம்பிசீங்களே பொங்கச்சோறு..
கடைசில எங்க நட்பு வட்டாரத்த, குறுகிய கூடாரமா ஆக்கிட்டு தான் போடறீங்க மாதியான சோறு...

நட்புன்னா என்னானு தெரியுமா? 
சின்ன பிரச்னைக்கு கூட செவுத்துல கால வெச்சு ஒதைக்குற KUNGFU இல்லமா..
சுமாரா ஆடுனா கூட சூப்பரா மார்க் போடற குஷ்பூ மா.. குஷ்பூ... 😢😢

காபீ குடிச்சுட்டா கப்-அ தூக்கி எறியலாம்.. ஆனா கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்ப தூக்கி ஏறிய முடியுமா....

ஜனவரி மாசம் ரெடி பண்ணுன சாம்பார்-அ  பிப்ரவரி வெரிக்கும் ப்ரிட்ஜ்ல வெச்சு, மார்ச் வெரிக்கும் பாதுகாப்பா குடுக்குறீங்க.. TV, TAPERECORDER தவற மத்த எல்லாத்தையும் அதுக்குள்ள திணிக்குறீங்க..

SHOPPING போய் லேட் ஆயிட்டாலோ, சீரியல் சென்டிமென்ட்-க்கு EMOT ஆயிட்டாலோ, ஒடனே கிண்டுறீங்க பாரு உப்புமா...... எர்ர்ர்..
மக்களே, வாரம் ஒரு நாள் பண்ணுனா தான் அது உப்புமா...
வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்ப தப்புமா...

போருக்கு போனவன்கூட பொழச்சு வந்திருக்கான். ஆனா பொண்ணுங்க கூட புடவை எடுக்க போனவன் கூடாரம் கவிழ்ந்து போய் கேவலமா தான் வந்திருக்கான். பொண்டாட்டி கூட துணி எடுக்க அமர்க்களம் அஜித் மாதிரி போன பல பேரு.. ஆரம்பம் அஜித் போல தல நெறச்சு வந்திருக்காங்க..

அரசமரம் போல இருக்கும் புருசன் ஒடம்புல தேக்கு உதிருர அளவுக்கு, புருஷன அதற்றத்துல Ph.D முடிச்ச நீங்க, கிச்சன்-ல கரப்பாண்பூச்சியும், பாத்ரூம்-ல பல்லியும் பாத்துட்டு போடுவீங்க பாரு ஒரு சத்தம்..
அத கேக்குற எங்களுக்கு, ஏதோ விட்டாலாச்சாரியா வீட்டுக்குள்ளயே பேய் வந்த மாதிரி தலைக்கு ஏறுது பித்தம்...
ஒரு தம்மாத்தூண்டு கரப்பாண்பூச்சிக்கே பயந்து கணவனை துணைக்கு கூப்புடுறீங்களே, நாங்களும் தான் பொண்டாட்டிக்கு பயப்படுறோம். ஆனா என்னிக்காவது அப்டி கத்தி கூப்பாடு போற்றுக்கோமா...

எண்ணை விட்டு செஞ்ச பன் மேல கொஞ்சம் வெண்ணையை தடவின மாதிரி, லைட்-ஆ தொப்பை வந்தாலே, ஒடம்ப கொர, வயித்த மர-னு காவடி சிந்து முதல் கண்ணிய சிந்து வரை பேச்சா பேசி கொல்லறீங்க..
இல்ல தெரியாம தான் கேக்குறேன், இது என்னமா நியாயம். DIET-ஆவும் புருஷன் தான் இருக்கனும், QUIET-ஆவும் புருஷன் தான் இருக்கணுமா???

I DONT KNOW WHY? ALL HUSBANDS சொல்லிங் பொய்..
இது எதனால-னு உங்களுக்கு புரியுதாமா?
நாங்க சொல்ற எல்லா பதிலுக்கும், நீங்க திருப்பி கேள்வியா கேட்டா, நாங்க எப்படிமா பதில் சொல்ல முடியும். பொய்ய தான் சொல்ல முடியும்.

வீட்டுக்கு வந்த மனுஷன்,
  • பசி ஏப்பம் விட்டா கூட BEER ஏப்பம்-னு நெனச்சு மோப்பம் புடிக்குறது.. 
  • சாப்பாடு போடுமா-னு கெஞ்சி கேட்டாலும் REMOTE-அ தூக்கி தலைல அடிக்குறது.. 
  • வாய தொறந்து பேசுனாலே நெருப்பா மொறைக்கிறது... 

வேண்டா BABY-மா கோவம்... ஆம்பளைங்க ALWAYS பாவம்...

கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ.. என்னிக்காவது சீக்கிரமா கெளம்பிருக்கீங்களா..
எட்டு முழம் SAREE-அ நீங்க BODY-ல சுத்துறதுக்குள்ள ASHOK LEYLAND லாரிக்கே BODY கட்டிறலாம். நீங்க MAKEUP முடிக்குறதுக்குள்ள, மேகம் இருண்டு, மழை பேஞ்சு, மதியானமே ஆயிரும்..
CLEOPATRA-க்கு எதுக்குமா THREADING.. 
MONALISA-க்கு எதுக்குமா BLEACHING...

"நீங்க எல்லாம் தங்கம் மா தங்கம்... "

நீங்க ஊருக்கு போற அன்னிக்கு தான் பல கணவர்கள் BAR-க்கே போறாங்க.. அத புரிஞ்சுக்காம கதவ தொறந்துபோட்டு தூங்காதீங்க, கைலிய தொறந்து போட்டு தூங்காதீங்க, சிலிண்டர்-அ OFF பண்ணுங்க.. TV சுவிட்ச் OFF பண்ணுங்கன்னு மொபைல்-லயே குடும்பம் நடத்துறீங்க..
முடியல மா.... முடியல...

எதையாவது புரியுற மாதிரி பேசுறீங்களா..
  • "அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா.. அப்டியே அப்பன் போல-னு" நீங்க சொன்னா.. "ஒடனே LAPTOP-அ மூடி வெச்சுட்டு வந்து குழந்தைய பாருடா-னு" அர்த்தம்.
  • "ஆபீஸ்-க்கு சீக்ரம் போகணுமா-னு" நீங்க கேட்டா, "பாத்திரம் நெறய சேந்துடுச்சு, கொஞ்சம் விளக்கி குடுடா-னு" அர்த்தம்... 
  • "தல வலிக்குதுன்னு" சொன்னா, "ஈவினிங் வரும்போது டிபன் வாங்கிட்டு வரணும்னு" அர்த்தம்..  

இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ்-ல ஒன்னு புதுசா போடணும்-மா... 

கல்யாணம் ஆன நாள்ல இருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பும் தொணதொணப்பும் இருக்கே தவற, என்னிக்காச்சும் ஒரு கிளுகிளுப்பு இருக்குதா..
வருஷத்துல முன்னூத்தி அறுபத்தி அஞ்சு நாள் இருக்கு.. அதுல ஒரே ஒரு நாள் உங்க பொறந்தநாள்.. அத மறந்தா, என்னமோ வைகோ-வ கேப்டன் மொறைக்குற மாதிரி பாக்குறீங்க.. சரி பொறந்தநாள் கூட ஓகே.. SOCIAL MATTER, பண்ணிக்கலாம்... ஒவ்வொரு கணவனும் தன் சந்தோஷத்தின் எதிரியா நெனைக்குற கல்யாண நாள ஞாபகம் வெச்சுக்க சொன்னா எப்படி மா..

வீட்டுக்கு வந்த ஒடனே வாய ஊது-னு சொல்லறீங்க... அதுவே விவரமா ஏதாவது பேசுனா, வாய மூடுனு சொல்லறீங்க.. இததான் எகனைக்கு மொகனை-னு சொல்வாங்களோ...

"மனைவிகளே.. மனைவிகளே..
நீங்கள் எங்களை தூக்கி வெளியே எறிந்தாலும்..
நாங்க வாசலில் செருப்பாக தான் கிடப்போம். "

"துணைவிகளே... துணைவிகளே...
நீங்கள் எங்களை கோவத்தில் கும்மி அடித்தாலும்..
குழம்புச் சட்டியில் பருப்பாகத்தான் கொதிப்போம். " 

GAME விளையாடிட்டு தரேன், செல்போன் குடு-னு கேக்குறப்போவே, அதுல BOMB செட் பண்ணுவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா..
பொம்பளைங்கனா கடுகு டப்பா, மொளகு டப்பால காசு ஒளிச்சு வெக்குறதும், ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், காண்டாக்ட் லிஸ்ட்ல நம்பர்-அ அழிச்சு வெக்குறதும் சகஜம் தான...

FACEBOOK-ல எங்களோட நடமாடத்த உளவு பாக்க, பிரெண்ட்ஸ் ID, FAKE ID-னு வரீங்க.. மொச புடிக்குற நாய மூஞ்சிய பாத்தே CATCH பண்ற நாங்க, எங்ககூட CHAT பண்றது, லேடி-யா இல்ல கேடி-யா னு கண்டுபுடிக்க மாட்டோமா..

ஆல் மனைவி-ஸ் நல்லா கேட்டுகோங்க... 
சரக்குக்கு தயிர் சோறு SIDE DISH ஆகாது...
சால்னாக்கு சர்பத் சிறப்பா இருக்காது..
அந்த மாதிரி புருஷன பொண்டாட்டி சந்தேக பட்டா, ஒரு நல்ல குடும்பம் அமையாது.

பக்கத்து வீட்டு பாட்டி-ல இருந்து, பியூட்டி பார்லர்-ல இருக்குற ஆன்டி வெரிக்கும் எங்கள அண்ணான்னு கூப்பிட சொல்லி வெச்ருகீங்களே.. அதுதாம்மா வன்கொடுமைக்கு மேல இருக்குற பெண் கொடுமை..

ஒரு புருஷனோட பிரச்னைய புரிஞ்சுக்கனும்னா ஒரு மாசம் வேணா, ஒரு வாரம் வேணா, ஒரு நாள் புருஷனா இருந்து பாருங்க...

ஓஓஓஓ.. SCIENCE, PHYSICS, CHEMISTRY இதெல்லாம் அனுமதிக்காதா...?
அப்போ ஆண்டவனா பாத்து, பொண்டாட்டிகளுக்கு ஒரு பொண்டாட்டி அனுப்பி வெச்சா தான், பொண்டாட்டிகளுக்கு பொண்டாட்டி பண்ற டார்ச்சர் புரியும்.

...அனைத்து கணவன்மார்களுக்கும் சமர்ப்பனம் ...