16.12.2010. மறக்க முடியாத நாள். ரொம்ப காலமாய் என் காலை சுற்றி இருந்த பாம்பு விலகிய நாள். கடந்த இரண்டு ஆண்டுகளாய் என்னை ஆட்டிபடைத்த பட்சியை அடித்து துரத்திய நாள். என் வளர்ச்சியை ஒடித்து முடக்கி, கிடப்பில் வைத்திருந்த கிரகத்தை விரட்டி விண்ணை நோக்கி ஓடச்செய்த நாள். தமிழக அரசாங்கமே ஒன்று சேர்ந்து என்னை பாராட்டி பட்டயம் வழங்கிய நாள். "அப்டி என்ன தான் டா நாள் அது?" என்று உங்கள் மனது அந்த நாளை பற்றி தெரிந்து கொள்ள, போருக்கு காத்திருக்கும் காவலனை போல சினங்கொண்டு எழுவதை என்னால் உணரமுடிகிறது.. நீங்கள் கடுப்பாகி கல் எடுத்து எரியும் முன்பு சொல்லிவிடுகிறேன் அந்த நாளை பற்றி.
அந்த நாளை பற்றி கூற, போதாது ஒரு ஜென்மம். எனினும் ஒரே வரியில் கூறவேண்டுமானால்.........................
ஆத்தா! நான் பாஸ் ஆயிட்டேன்!!!!
இப்போது புரிந்திருக்கும் எனது இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று. ஆம்.. நீண்ட நாளாய் வைத்திருந்த அறியர் பேப்பர் ஒன்றை கண கச்சிதமாக கசக்கி தூக்கி எரிந்து விட்டேன். அகிலமே போற்றும் அளவில் 64 மார்க். தமிழகமே பாராட்டி, எனக்கு இணைய தளத்தில் சான்றிதழ் வழங்கி உள்ளது. "அதென்ன சான்றிதழ்?" என்று பொறாமையில் கேட்கும் உங்களின் mind voice-ஐ நான் catch பண்ணிட்டேன். அதுதான் என்னுடைய ரிசல்ட் காப்பி. ஹி ஹி ஹி.........
mikka nallathu....
ReplyDeleteVetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com