என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Friday

ஆட்டு தாடிக்கு ஆப்பு!


புதியதாக Bajaj Pulsar 220 cc வாங்கிய மமதையில் இருந்த நண்பன் ஒருவன் நேரிட்ட கோர சம்பவத்தை தான் இங்கு இந்த இடுகையில் செதுக்கி உள்ளேன். இவன் தனது வாகனத்தின் சாவியை நுழைத்து வண்டியின் என்ஜின் சத்தம் கேட்டதும், மனதில் R1 Racer திரு. Valentino Rossi என்ற நினைப்பு வந்துவிடும். ஆனால் இவனுக்கு ஒரு மிதிவண்டியை கூட ஒழுங்காக மிதிக்க தெரியாது என்பதுதான் உண்மை. தாடையின் ஓரத்தில் சிறிதளவு ரோமங்கள் எட்டி பார்க்கும் இவனுக்கு French Beard (அதாவது ஆட்டு தாடி) வைக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதற்காகவே முகத்தில் தாடையின் ஓரத்தில் ஒட்டிகொண்டிருக்கும் முடிகளை சீராக ஒருங்கிணைத்து வைத்து சுற்றி திரிந்துகொண்டிருந்தான். இன்று அந்த ஆட்டு தாடி ஆசையின் மேல் விழுந்தது ஒரு 6000watts இடி. 

மதியம் சுமார் 1:30 மணியளவில், வயிற்று பசி வாட்டி எடுக்க, கடகடவென  அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பினான் தனது வண்டியின் உதவியுடன். பசி மயக்கம் கண்ணை மறைக்க ஆரம்பித்த நிலையில், வாகனத்தின் வேகத்தை அதிகபடுத்தினான். திடீரென்று வண்டியின் வேகம் குறைந்தது. Traffic Signal!. பச்சை விளக்கு எறிந்தவுடன் மின்னல் வேகத்தில் செயல் பட்ட அவன், தனக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மேல் சனி பகவான் உட்கார்ந்து சவுக்கை ஆட்டி சவாரி செய்வதை கவனிக்கவில்லை. திடீரென்று தனக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் நிற்க, பின்னால் வந்த இவன் தனது வேகத்தை கட்டுபடுத்த முடியாமல், அந்த நின்ற வாகனத்தின் அடியில் தனது வண்டியை park செய்துவிட்டான். எழுந்து நின்று, அருகில் இருக்கும் வாகனம் ஒன்றின் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க........ ஓஓஓஓஓஓஓஓ வென ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டான். காரணம் அவன்  முகத்திலோ, உடம்பிலோ எங்கும் அடிபடவில்லை. போய் விழுந்த வேகத்தில் கிழிந்தது அவனது தாடை மட்டுமே. நல்ல வேளையாக Helmet அணிந்திருந்ததால், தலை தப்பியது. 

இதன் மூலம் நான் கற்ற பாடம்: 
சர்ர்ர்ர்ர்ர்ர்............. என சென்றால் சறுக்கி விடும்.

16-12-2010


16.12.2010. மறக்க முடியாத நாள். ரொம்ப காலமாய் என் காலை சுற்றி இருந்த பாம்பு விலகிய  நாள். கடந்த இரண்டு ஆண்டுகளாய் என்னை ஆட்டிபடைத்த பட்சியை அடித்து துரத்திய நாள். என் வளர்ச்சியை ஒடித்து முடக்கி, கிடப்பில் வைத்திருந்த கிரகத்தை விரட்டி விண்ணை நோக்கி ஓடச்செய்த நாள். தமிழக அரசாங்கமே ஒன்று சேர்ந்து என்னை பாராட்டி பட்டயம் வழங்கிய நாள். "அப்டி என்ன தான் டா நாள் அது?"  என்று உங்கள் மனது அந்த நாளை பற்றி தெரிந்து கொள்ள, போருக்கு காத்திருக்கும் காவலனை போல சினங்கொண்டு எழுவதை என்னால் உணரமுடிகிறது.. நீங்கள் கடுப்பாகி கல் எடுத்து எரியும் முன்பு சொல்லிவிடுகிறேன் அந்த நாளை பற்றி.

அந்த நாளை பற்றி கூற, போதாது ஒரு ஜென்மம். எனினும் ஒரே வரியில் கூறவேண்டுமானால்.........................


ஆத்தா!  நான் பாஸ் ஆயிட்டேன்!!!!

இப்போது புரிந்திருக்கும் எனது இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று. ஆம்.. நீண்ட நாளாய் வைத்திருந்த அறியர் பேப்பர் ஒன்றை கண கச்சிதமாக கசக்கி தூக்கி எரிந்து விட்டேன். அகிலமே போற்றும் அளவில் 64 மார்க். தமிழகமே பாராட்டி, எனக்கு இணைய தளத்தில் சான்றிதழ் வழங்கி உள்ளது. "அதென்ன சான்றிதழ்?" என்று பொறாமையில் கேட்கும் உங்களின் mind voice-ஐ நான் catch பண்ணிட்டேன். அதுதான் என்னுடைய ரிசல்ட் காப்பி. ஹி ஹி ஹி.........

Monday

வாத்தியார் ஆகிய வானரம்


வாத்தியார் - ந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிவதற்கு முன் சேர்த்து விட்டேன், படித்த கல்லூரியிலே ஆசிரியராக. முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கணிப்பொறி வாத்தியார். 

அட கடவுளே, உனக்கு இவன் வேலையில் சேரும் நாளன்று காலையில் மட்டும் கண் குருடாகிவிட்டதா, இப்போ மட்டும் அந்த சுனாமி எங்கே ஓடி போய் ஒளிந்து விட்டது. என்று சக நண்பர்களின் கொலைவெறி கண்ணை கட்டியது. நானே இப்படி ஒரு பதவிக்கு வந்ததை எண்ணி அச்ச பட்டேன். ஏனெனில், படிக்கும் வயதில் நான் அந்த கல்லூரிக்குள் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அதையெல்லாம் விவரிக்க இந்த ஒரு வலைபதிவு பத்தாது. அவ்வளவு அயோகியத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கிதனம் செய்து விட்டேன் அந்த கல்லூரிக்குள். எப்படியோ இனியாவது ஒழுங்காக இருக்க முயற்சி செய்கிறேன். பாப்போம்....