என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Tuesday

கோழியும் நானும்!!!!!


                    நேற்று மாலை சற்றே சூரியன் தாழ்ந்த நேரம், வானம் தன் நிறத்தில் இருந்து மாறுபட்ட வேளை, கல்லூரி மணி ரிங்கக்க்க்க் என்று ஒலித்த மறுநொடி, ஓரமாய் உட்கார்ந்து இருந்த நான் புயல் வேகத்தில் எழுந்து சூறாவளி போல ஓட ஆரம்பிதேன் எனது வீட்டை நோக்கி. காரணம், 5 மணிக்கு கிடைக்கும் சூடான காபி. ஹோப் காலேஜ் நெருங்கும் போது எனது சக வாத்தியார்கள் இருவர் , "இங்க கோழி க்ரில் நல்ல இருக்கும் சார்" என்று வெறுபேத்த, சரி வாங்க போகலாம் என்றேன். சீக்கிரம் போனா தான் கிடைக்கும் சார், லேட் ஆச்சுனா தீர்ந்து போய்டும் னு அவர் சொல்லி முடிபதற்குள், சோத்துக்கு அலையும் பிச்சைகாரன் கூட மெதுவாகத்தான் சென்றிருப்பான் போலும். நான் அவனை விட வேகமாய் செயல்பட ஆரம்பிதேன். ஏனென்றால், அவளவு பிரியம் அந்த கடைநாசமா போன கொக்கரகோ மீது. ஐந்து நிமிடம் முன்பே அவர்கள் சொன்ன கடையை அடைந்து விட்டோம். கடைக்குள் நுழையும்போது காட்டில் இருக்கும் கரடிக்குட்டி வேஷ்டி கட்டி வந்துவிட்டது என்று பதறி போய், அருகில் அமர்ந்து பார்த்தால்............

அது அந்த கடையின் அந்த கடையின் முதலாளி.....

வாங்க சார், என்ன வேணும்? என்று கனத்த குரலில் கேட்க, மிரண்டு போன நான் எனது சக வாத்தியார்களை முன்னால் விட்டு, பின்னல் வந்த வண்ணம் சென்றேன்.
அப்பாட, ஒரு வழியாக எல்லா ஆபத்தையும் தாண்டி கடையின் மொட்டை மாடியில் அழகாக அமைத்து இருந்த அந்த பூந்தோட்டத்தின் நடுவில் உட்கார்ந்து சர்வர்-இன் வருகையை எதிர் பார்த்து கொண்டிருந்தேன். சில மணித்துளியில் அவரும் வந்து விட்டார். எப்படியோ இன்று ஒரு முழு கோழியை வேட்டையாடி விடவேண்டும் என்று வெறியோடு இருந்த எனக்கு, நன்றாக கொழுக் மொழுக் என்று வளர்ந்த கோழியின் மேல் சற்றே மசால் தூவி, எண்ணெய் விட்டு, பெப்பர் தடவி, சுட சுட எனது டேபிள் மேல் வந்து கிடைத்தது.

அந்த அரைமணி நேரம் எனக்கும் கொழிக்கும் நடந்த சண்டையில் ஜெயித்தது நானே...
ஆற அமர ஒரு கோழி பிரியாணி வேறு.

கடைசியில், கொஞ்சம் சோம்பும், இரண்டு பல் குத்தும் குச்சியும் இனாமாய் கிடைத்தது..
ஒரு பெரிய ஏப்பம் விட்டு, அந்த கடை முதலாளி "காட்டு கரடி"இடம்  நன்றி சொல்லி கிளம்பினோம்.
அடடடடடா..........
என்னே தமிழனின் கை பக்குவம்..
இதுபோல் கோழி சாப்பிட எடுக்க வேண்டும் இன்னொரு ஜென்மம்....


கருத்து: மிருகங்களை வதைக்காதீர்கள். :-)

No comments:

Post a Comment