என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Friday

லேப்டாப்-உம்... நானும்.

கோவையில் பிரபல கல்லூரி ஒன்றில் நடந்த காம்பஸ் இண்டர்வியு க்கு தோழி ஒருவருடன் சென்றிருந்தேன். அன்று அங்கு நடந்த இண்டர்வியு-ல் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. காரணம், அந்த கல்லூரியில் குவிந்திருந்த மாணவியர் கூட்டம். கத்திரிக்காய், முருங்கைக்காய், வாழைபழம், சாத்துக்குடி market போன்ற பல விதமான ரகங்களை அங்கே காண முடிந்தது. அடடடா........ என்ன ஒரு அறுபுதமான காட்சி.... சிறப்பாக பொழுதை கழித்து விடலாம் என்று எண்ணி அந்த பிகுறேஸ் இருக்குற பக்கம் சென்றேன்.. அதற்குள் கழுகுக்கு மூக்கு வேர்தாற்போல், எனது கைபேசியில் அழைப்பு விடுத்தாள் தோழி. என்னவென்று கேட்டதற்கு, மறுமுனையில்.. "எனோட லேப்டாப் எடுத்துட்டு போடா.. அதுல கொஞ்சம் நோட்ஸ் இருக்கு.. அதா படிச்சுட்டு வந்து ஒழுங்க இபோ இண்டர்வியு அட்டென்ட் பண்ணு. மவனே அங்க எவளையாவது பாத்து பல்ல கெஞ்சிட்டு இருக்காத. புரிஞ்சுதா." என்று முடித்தவள் தனது இண்டர்வியு க்கு தயார்  ஆனாள்.


சரி இவளவு தூரம் சொல்றாங்களே, படிச்சுட்டு பொய் கண்டிப்பா வேலை வாங்கிரனும் ன்னு, அவளிடம் சென்று லேப்டாப் ஐ வாங்கி வந்து ஒரு சிறிது தூரத்தில் இருக்கும் குட்டி சுவரு ஒன்றில் அமர்ந்தேன். கண்டிப்பாக இந்த வேலை வாங்கிட வேண்டும் என்ற முழு வீச்சில் அந்த லேப்டாப் ஐ திறந்தேன்.......

திறந்தேன்.....
திறந்தேன்....
மறுபடியும் திறந்தேன்.....

அந்த கருமம் புடிச்ச லேப்டாப் க்கு எதோ லாக் இருக்கு என்று அறிந்து, அந்த லாக் ஐ தேட ஆரம்பித்தேன். 
மணி 1.00

தேடி கொண்டிருக்கிறேன்..
மணி 2.45

தேடிகொண்டே இருக்கிறேன்...
மணி  3.00

இண்டர்வியு முடித்து விட்டு தோழி வந்து நின்றாள்..
"டேய் நாதாரி, உன்ன என்ன டா சொனேன். இன்னும் நீ படிக்கவே இல்லையா? 
அங்கே எலாம் முடிஞ்சுது டா.."

கடுங்கோபத்துடன் கொந்தளித்து எழுந்த நான், போடி பக்கி பயலே.. இந்த லேப்டாப் தொறக்கவே மாட்டேன்குது..... என்று ஆரம்பித்து ஒரு 10 நிமிடம் நல்லா திட்டி விட்டேன். 

"அட அறிவு கெட்ட முண்டம்.. இவ்ளோ நேரம் நீ நோண்டிட்டு இருந்தது எனோட லேப்டாப் கவர் டா.."

????????????

ஆத்தா சுட்ட வடை


மாலை 6 மணி அளவில் அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு மிகவும் சோர்வுடன் வீடு சென்று அடைந்த நான், ஆற அமர எனது குப்பை படுகையில் உட்கார்ந்து, "அம்மா காப்பி குடு" என்றேன். இரு டா வரேன் என்று பதில் வந்தது. சரி சுட சுட காப்பி குடித்துவிட்டு சற்று ஓய்வு எடுக்கலாம்னு நினைக்கும்போது, சுட சுட சுட்ட வடைகள் வந்திறங்கியது அம்மாவின் கையிலிருந்த தட்டிலிருந்து. 

இத எதுக்கு மா கொண்டுவந்தே. நான் உங்கிட்ட என்ன கேட்டேன் நீ என்ன பண்ணிருக்கே.... என்று கொஞ்சம் கனமாக அதட்டி விட்டேன். அதற்கு என் தாய் கொடுத்த விளக்கங்கள் பின் வருபவைகள்....

அட அறிவுகெட்ட முட்டா பய மவனே.. இது சாதாரண வடை இல்ல டா. மனதுக்கு தெம்பும், உடலுக்கு வலிமையையும் தர கூடிய பருப்பு வடை. இத தினமும் ஒன்னு சாப்டா, ஒடம்புக்கு எந்த நோயும் வராது, வேலை களைப்பு இருக்காது, ஒடம்பு எப்பும் சுறுசுறுப்பா இருக்கும். வெயில் காலத்துல இந்த வடை மிகவும் நல்லது. சூட்டை தனித்து சுறுசுறுப்பை தரும். முகத்துல பரு இருந்தா மறைஞ்சுடும். இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு டா ராஜா-னு சொல்லி முடித்த கணம் நான் திறந்த வாய் மூடாமல் இருப்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது. வாயில் வழிந்த ஜொள்ளை துடைத்துக்கொண்டு வயிறார வடைகளை வதம் செய்தேன்.

Moral: பருப்பு வடையின் மேல் வெறுப்பு வேண்டாம்.