என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Wednesday

மந்திரிகளுக்கு முந்திரி



பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது, பிரதமர் அலுவலகத்தின் அனுமதி இல்லாமல், மத்திய அமைச்சர்கள், தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக் கூடாது' என, மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதேபோல், மாநில முதல்வர்களின் வெளிநாட்டு பயணத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலகம் இது குறித்து, அனைத்து அமைச்சரவைக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத. பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது, பிரதமர் அலுவலகத்தின் முறையான அனுமதி இல்லாமல் மத்திய அமைச்சர்கள், வெளியூர் பயணம் மேற்கொண்டு நாட்டை காப்பாற்றுகிறோம் என்று கூறி விட்டு, தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தங்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த மக்கள் கூட்டத்தை கூடி கொண்டு சர்ர்ர்ரர்ர்ர்ரர் என்று விமானத்தில் ஓடி விடுகின்றனர். இனி இந்த உடான்ஸ் வேலை எல்லாம் எங்களிடம் நடக்காது என்று பிரதமர் அலுவலகம் உஷாராகி விமான பயணங்களுக்கு தடை விதித்துவிட்டது. இனி இதுபோன்றபொதுப்பணி பயணத்தின் போது, சம்பந்தபட்ட அமைச்சரவையின் அதிகாரிகளோ, ஊழியர்களோ அமைச்சர்களின் உடன் செல்லக் கூடாது. அதேபோல், மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்களும், தங்களின் வெளிநாட்டு பயணத்துக்கு முன், அது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிப்பதோடு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியையும் பெற வேண்டும்.மத்திய அமைச்சர்கள் அலுவல் ரீதியான வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போதும், அதுகுறித்து 15 நாட்களுக்கு முன்னதாகவே, வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல், பயணத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.வெளிநாட்டு அரசுகளிடமோ, சர்வதேச அமைப்புகளுடனோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடனோ நேரடியாக தொடர்பு கொண்டு பயணத்துக்கு அனுமதி கோரக் கூடாது. அதற்கு முன், வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்.அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம், சம்பந்தபட்ட நாடுகளின் அழைப்பின் பேரிலேயே பரிசீலிக்கப்படும். மேலும், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் நாளையும், அங்கிருந்து திரும்பும் நாளையும் முறைப்படி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய மந்திரிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது பற்றி மத்திய அரசு கண்டித்தது. ஆனால் கூட்டணி அரசாக இருப்பதால், மந்திரிகளின் வெளிநாட்டு பயணம் அதிகளவில் இருந்தது. மேலும்  செயலக அதிகாரிகளும் இப்பயணத்தில் ஈடுபடுகின்றனர்.மத்திய அரசு சிக்கன நடவடிக்கை என்ற அடிப்படையில், மந்திரிகள் பயணம் குறித்து அதிக கவனம் தேவை என்று குறிப்பிட்டிருந்தும். தற்போது பிரதமர் அலுவலத்தின் இந்த அறிக்கை இவ்விஷயத்தில் அதிக கெடுபிடி காட்ட  மத்திய அரசு முன் வந்திருக்கிறது. மாநில முதல்வர்கள் வெளிநாட்டு பயணமும் முன்கூட்டியே பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.